கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

சென்னை விமான நிலையம் அருகே கனமழை பெய்ததால், 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.;

Update: 2023-11-03 05:43 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அத்துடன், தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையம் அருகே கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்ததால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமடித்தன. மேலும், சென்னையில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்