தேங்காய்களுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்யப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேங்காய்களுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;

Update: 2023-03-10 20:30 GMT

வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். மரத்தில் தேங்காய்கள் காய்த்த பிறகு, அவற்றை பறித்து, உரித்து, வாகனங்களில் ஏற்றி விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர் மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். கடைகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு தேங்காய் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் ஒரு தேங்காய் ரூ.7 முதல் ரூ.8-க்கே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வடமதுரையை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் எங்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. எனவே தேங்காய்களுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல் தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தேங்காய்களின் தேவை அதிகரித்து, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யும் திட்டத்தை அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்