கோவில்பட்டியில் ஐவர் கால்பந்து போட்டி

கோவில்பட்டியில் ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2022-06-10 11:42 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் ஐவர் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. போட்டியில் 8 அணிகள் பங்கு பெற்றன. இறுதி போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், காமநாயக்கன் பட்டி அணியும் மோதியது. இதில் வ.உ.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. வ.உ.சி.அரசு பள்ளி அணி 2-வது இடம் பெற்றது. 3-வது, 4-வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி காமராஜ் பள்ளி அணியும், வீரவாஞ்சி நகர் அணியும் மோதின. காமராஜ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கால்பந்து கழக செயலாளர் டி. தேன் ராஜா தலைமை தாங்கினார். ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். மாரித்துரை வரவேற்றுப் பேசினார். பரிசுகளை மாவட்ட தடகள வீராங்கனை சண்முகப்பிரியா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் வழங்கினர். பிரிதீப் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்