மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள்

மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-15 19:07 GMT

உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் காட்பாடி காந்திநகர், 5-வது மேற்கு குறுக்குத்தெருவில் உள்ள வேலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை adfifvellorel@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயன் பெறலாம்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்