நாலூரில் மீன்பிடி திருவிழா
நாலூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.
காரியாபட்டி,
நாலூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.
மீன்பிடி திருவிழா
நரிக்குடி பகுதியில் சென்ற ஆண்டு நல்ல மழை பெய்ததால் இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் முழுவதும் நிரம்பியது. மேலும் கிருதுமால் நதியில் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலமும் இந்த பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியது. இந்தநிலையில் நரிக்குடி அருகே உள்ள நாலூர் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாலூர், நாலூர் காலனி, சீனிமடை ஆகிய கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் போட்டி போட்டு கொண்டு கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளி சென்றனர்.
பெரும் மகிழ்ச்சி
இந்த கண்மாயில் கெண்டை, கெளுத்தி, விறால், சிலேபி குறவை உள்பட பல்வேறு வகையிலான மீன்களை பிடித்து சென்றனர். மேலும் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நாலூர் கிராமத்தை சேர்ந்த பூமி மற்றும் சீனிமடை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, முத்து ஆகியோரது வலைகளில் 5 கிலோ கட்லா கெண்டை மீன்கள் ஒரே நேரத்தில் முழு மீன்களாக வலையில் சிக்கியதால் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.