வேப்பூர் அருகே பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா

வேப்பூர் அருகே பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.;

Update: 2023-09-16 18:45 GMT

வேப்பூர், 

வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் தண்ணீர் குறைந்தவுடன் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏரிக்கரை ஆலமரத்தின் அருகே உள்ள கங்கையம்மன் கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் வழிபாடு நடத்தி வெள்ளை கொடி காட்டினார்கள். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் நகர், நல்லூர், வண்ணாத்தூர், சித்தூர், சாத்தியம் இலங்கியனூர், ஐவதுகுடி, சேப்பாக்கம், திருப்பெயர், நாரையூர், சிறுநெசலூர் கழுதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல வகையான மீன்களை பிடித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்