மீன்பிடி தடைகாலம் எதிரொலி: சென்னை காசிமேட்டில் மீன்களின் விலை கிடுகிடு உயர்வு.!

சென்னை காசிமேட்டில் மீன்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

Update: 2023-04-16 09:19 GMT

சென்னை,

மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளதால், சென்னை காசிமேடு துறைமுகத்தில் சுமார் 4000க்கும் அதிகமான விசைப்படகுகள், மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறய ரக படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தடைக்காலத்தால், பைபர் படகுகள் மூலமே மீன்கள் பிடிக்கப்படுகிறது. இதனால், மீன்வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மேலும், இன்று வார விடுமுறை என்பதால், காசிமேடு மீன்சந்தையில் மீன்பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். மீன்களின் விலை அதிகரித்து இருந்தாலும், மீன்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை தேவைக்கேற்றவாறு வாங்கிச்சென்றனர்.

வஞ்சரம் ஒரு கிலோ 1,050 ரூபாய்க்கும், வவ்வால் 1,400 ரூபாய்க்கும், சங்கரா மற்றும் சீலா மீன்கள் தலா ரூ.500க்கும் விற்கப்படுகிறது. நண்டு, இறால் ஆகியவை தலா ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்