தொடங்கியது மீன்பிடி தடைகாலம் - ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன்கள் விலை
நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றிற்கான விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அவற்றிற்கான விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிலோ வஞ்சிரம், இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல பாரை கிலோ 300க்கும், விளை மீன் கிலோ 400க்கும், சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.