மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

Update: 2023-07-05 19:30 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் வேதாரண்யம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் பகுதியில் சூறைக்காற்று தொடர்ந்து வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்