மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

Update: 2024-02-20 05:28 GMT

ராமேஸ்வரம்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பேரணியில் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி பேரணி சென்று தங்களது அரசு அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக முக்கிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்