மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது.;
நாகர்கோவில்:
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது.
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை 26-ந் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிட வேண்டும்.
கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.