விசைப்படகில் மீனவர் 'திடீர்' சாவு

மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகில் மீனவர் ‘திடீர்’ சாவு

Update: 2022-10-22 18:45 GMT

புதுக்கடை, 

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப், மீனவர். இவரது மகன் மெர்லின் ஜோ. இவர்களும் வேறு சில மீனவர்களும் இனயம்புத்தன்துறையை சேர்ந்த சகாயராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க ெசன்றனர். இவர்கள் கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு இரவு படகில் தூங்கினர். மறுநாள் காலையில் பார்த்த போது மெர்லின் ஜோ படகில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். இதைபார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடல் நேற்று காலையில் ேதங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்