மீனவர் திடீர் சாவு

உவரி அருகே மீனவர் திடீரென்று இறந்தார்.

Update: 2022-11-07 20:03 GMT

திசையன்விளை:

உவரியை அடுத்த கூட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் எமர்சன் (வயது 39). இவர் நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த டேவிட், விமல், விவேக் ஆகியோருடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். நேற்று மாலை பிடிபட்ட மீன்களை கடலில் இருந்து பைபர் படகிற்கு கொண்டுவர முயன்றபோது படகில் எமர்சன் திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உவரி கடலோர போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்