மது குடித்ததை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

முட்டத்தில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2023-09-01 15:31 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டத்தில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

மனைவி கண்டித்தார்

முட்டம் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் போல்கான் (வயது 55), மீனவர். இவருடைய மனைவி புனிதா. போல்கானுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை போல்கான் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது புனிதா அவரை கண்டித்தார். உடனே அவர் கோபமாக வீட்டிலுள்ள அறைக்கு சென்றுவிட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அந்த அறையில் உள்ள கழிவறைக்கு இரவு அவருடைய மகன் சென்றார். அப்போது அங்கு உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு போல்கான் தொங்கிய நிலையில் இருந்தார். அதை பார்த்ததும் மகன் அலறினார். உடனே புனிதா மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே போல்கான் இறந்து விட்டார் என தெரிவித்தார்.

இதுகுறித்து புனிதா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்