அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை தந்தனர்.;
தாமரைக்குளம்:
அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆண்டு ஒன்றுக்கு 150 மாணவர் வீதம் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஏற்கனவே கல்லூரி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் சேர்க்கை நடைபெற்று, மூன்றாம் ஆண்டு சேர்க்கை முடிந்தது. இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு வருகை புரிந்தனர். மேலும் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது.