மாநில கைப்பந்து போட்டி:நெல்லை வக்கீல் சங்க அணி முதலிடம்

மாநில கைப்பந்து போட்டியில் நெல்லை வக்கீல் சங்க அணி முதலிடம் பிடித்தது.;

Update: 2023-02-13 21:05 GMT

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நாகர்கோவில் வக்கீல் சங்கம் சார்பில், மாநில அளவில் வக்கீல்களுக்கான கைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த நெல்லை வக்கீல் சங்க அணிக்கு ஐகோர்ட்டு நீதிபதி சவுந்தர் பரிசுக்கோப்பை வழங்கினார். 2-வது இடத்தை தென்காசி வக்கீல் சங்க அணியும், 3-வது இடத்தை புதுச்சேரி வக்கீல் சங்க அணியும், 4-வது இடத்தை கடலூர் வக்கீல் சங்க அணியும் பிடித்தது. சிறந்த ஆட்டக்காரருக்கான விருது நெல்லை அணி வீரர் ராஜேசுக்கு வழங்கப்பட்டது. விழாவில் நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் காமராஜ், மூத்த வக்கீல் பாலகணேசன், அணி கேப்டன் குமார் பாண்டியன், முத்துராஜ், ராஜா முகம்மது, மணிகண்டன், தங்கவேல், இசக்கிபாண்டியன், ராஜா, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்