பட்டாசு தொழிலாளி மர்ம சாவு

பட்டாசு தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2023-08-21 18:55 GMT

சிவகாசி, 

சிவகாசி பள்ளப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சினிமாவுக்கு சென்று வந்த முத்துராஜ் வீட்டிற்கு வந்தவுடன் குளித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சுவலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை ஆட்டோ மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், முத்துராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அமுதா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்