மதுரைகாளியம்மன் கோவிலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி
மதுரைகாளியம்மன் கோவிலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.;
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் மற்றும் பெரிய தேர் மற்றும் சின்ன தேர் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும் தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கடந்த ஒருவாரமாக நடைபெற்ற இத்திருவிழாவில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று இரவு தொட்டியம் வானப்பட்டறை மைதானத்தில் இரண்டு தேர்களுக்கு பூஜைகள் செய்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொட்டியம் மற்றும் சுற்று புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.