தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி;
கூத்தாநல்லூரில் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்தில் சென்று கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதிகளில் தீ விபத்து எதனால் ஏற்படுகிறது. அதனை தடுக்க என்ன வழி என்பது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வெயில் காலங்களில் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் முழுவதும் நிரப்ப வேண்டாம், சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், கியாஸ் அடுப்பு பயன்படுத்துபவர்கள் சமையல் முடிந்ததும் ரெகுலேட்டரை நிறுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.