போலீசாருக்கு தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி

கும்பகோணத்தில் போலீசாருக்கு தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.;

Update: 2023-08-02 20:24 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமிமலை, பட்டீஸ்வரம், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசாருக்கு தீ விபத்து விழிப்புணர்வு குறித்த பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பெரும் சேதம் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது, தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும்தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் கும்பகோணம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், செந்தில்குமார், கவிதா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்