திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில்தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமை தாங்கி, மாணவ பயிற்றுனர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் விளக்கி கூறினார். சிறப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் வீரர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ், இசக்கி, அகஸ்டின் ஆகியோர் செயல்முறை விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் செய்திருந்தார்.