தீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.;

Update: 2023-09-23 18:45 GMT

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் செல்வநாயகம் முன்னிலை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தனசேகரன், ரமேஷ், மணிமாறன் ஆகியோர் கன மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்காப்பு முறைகள் பற்றி விளக்கிக்கூறினர். செயல்முறை விளக்கங்களும் செய்துகாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகேஸ்வரி மற்றும் மாணவி ராஜேஸ்வரி ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்