தென்னை நார் தொழிற்சாலையில் தீ

நத்தம் அருகே தென்னை நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.;

Update: 2023-08-03 16:37 GMT

நத்தம் அருகே சிறுகுடி நல்லகண்டத்தில் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென அந்த தொழிற்சாலையில் தீப்பற்றியது. சிறிதுநேரத்தில் மள, மளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராடி, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தென்னை நார் எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்துக்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்