பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பையில் தீ விபத்து
பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பையில் தீ விபத்து
அனுப்பர்பாளையம்
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அருகே எஸ்.என்.ஜி.நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென குப்பை தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அவினாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.