மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.;
தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 35). விவசாயி. குள்ளபுரம் பெருமாள்பட்டி சாலையில் உள்ள தனது வாழைத் தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தோட்டத்திற்கு வெளியே வேலி ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவருடைய மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. உடனே அவர் தோட்டத்தில் இருந்து ஓடி வந்து தீயை அணைத்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பால்பாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.