தீ தடுப்பு ஒத்திகை
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவமனை டீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவ அலுவலர் சூரிய பிரதிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி தெர்மல்நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி நிலைய அலுவலர் (பொறுப்பு) அருணாச்சலம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று ஒத்திகை நடத்தினர். பல்வேறு வகையான தீ விபத்துக்கள் ஏற்படும் போது அவைகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது, தீயை எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு படையினர் செயல்விளக்கம் மூலம் செய்து காட்டினர். இதில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.