ஸ்கேன் சென்டரில் தீ விபத்து
ஸ்கேன் சென்டரில் தீ விபத்தில் ரூ.1½ கோடி கருவிகள் எரிந்து சேதம் அடைந்தன;
பரமக்குடி அய்யாதுரை தெருவில் தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஸ்கேன் சென்டரில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் ஸ்கேன் சென்டரில் இருந்த எந்திரங்கள், கெமிக்கல்ஸ், சி.சி.டி.வி. கேமராக்கள், டி.வி.கள், பிரிட்ஜ் உள்பட ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.