விருத்தாசலம்நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

விருத்தாசலம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-20 20:16 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்கு சொந்தமான பெரியவடவாடியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு. நேற்று முன்தினம் முதல் எரிந்து கொண்டிருந்தது. நேற்று தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்