போடியில் தீ விபத்து

போடியில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2022-07-29 15:55 GMT

போடி அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். இவர், தான் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு அருகே ஓலைகளால் ஆன செட் போட்டிருந்தார். இந்நிலையில் அந்த செட்டில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் தீப்பற்றி எரிவதை கண்ட அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்்சி அடித்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தொிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்