பாரைப்பட்டி மின் நிலையத்தில் தீ
சிவகாசியில் பலத்த மழை பெய்தது. இதனால் பாரைப்பட்டி மின்நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.;
சிவகாசி,
சிவகாசியில் பலத்த மழை பெய்தது. இதனால் பாரைப்பட்டி மின்நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
மின் நிலையத்தில் தீ
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
நகரில் உள்ள நீர் ஆதாரமான பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய், செங்குளம் கண்மாய், பன்னீர் தெப்பம் ஆகியவைக்கு தண்ணீர் வந்தது. இந்தநிலையில் சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி துணை மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளும், சிவகாசி கிழக்கு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்னல் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.