ஆவண பாதுகாப்பு அறைகளில் தீ விபத்தை எச்சரிக்கும் கருவி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆவண பாதுகாப்பு அறைகளில் தீ விபத்தை எச்சரிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2023-03-30 16:17 GMT

தமிழகத்தில் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் முக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் அறைகள் உள்ளன. இந்த அறைகளில் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விடுகின்றன. இதனால் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகும் அபாயம் உள்ளது.

மேலும் ஒருசில மாவட்டங்களில் ஆவண பாதுகாப்பு அறைகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் ஆவண பாதுகாப்பு அறைகளில் தீ விபத்தை எச்சரிக்கும் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொறுத்தவரை முதல் தளத்தில் 2 ஆவண பாதுகாப்பு அறைகளும், 2-ம் தளத்தில் ஒரு ஆவண பாதுகாப்பு அறையும் என மொத்தம் 3 ஆவண பாதுகாப்பு அறைகள் இருக்கின்றன.

இந்த 3 ஆவண பாதுகாப்பு அறைகளிலும் தீ விபத்தை எச்சரிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதோடு தீ தடுப்பு கருவிகளும் தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 3 அறைகளிலும் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் உடனடியாக அந்த கருவி எச்சரித்து விடும்.

அதையடுத்து கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருக்கும் அலாரம் ஒலித்து விடும். அதன்மூலம் தீ விபத்தை எளிதில் அணைக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்