வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசம்

Update: 2023-04-19 15:51 GMT


தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த வைக்கோல் நேற்று மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து வைக்கோல் மீது ஊற்றி அணைக்க முயற்சித்தனர். அதற்குள் வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும்.

அதேபோன்று சவுடேஸ்வரமன் கோவில் அருகே அமராவதி ஆற்றை ஒட்டி உள்ள முட்புதர்களில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு நிலைய வாகனம் வேறு இடத்துக்கு சென்றதால் நகராட்சி குடிநீர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர

மேலும் செய்திகள்