கிருஷ்ணகிரியில்தீ தொண்டு நாள் அனுசரிப்பு

Update: 2023-04-14 19:00 GMT

தீயணைக்கும் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் போது தன் உயிரை தியாகம் செய்து பிற உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்றியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கம் தலைமை தாங்கி நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் வெங்கடாஜலம், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்