கரும்பு ேதாட்டத்தில் திடீர் தீ விபத்து
கரும்பு ேதாட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரும்பு ேதாட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் மணியின் மனைவி நல்லம்மாள் (வயது 52). விவசாயி. இவர் தனது சின்னப்பனங்காடு தோட்டத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு இவரது தோட்டத்தில் உள்ள கரும்பு பயிரில் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால் கரும்பு பயிர் முழுவதும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதனை தொடர்ந்து நல்லம்மாள் குடும்பத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி (போக்குவரத்து) தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்்தனர். இந்த தீ விபத்தில் ஒரு ஏக்கர் பரப்பிலான ரூ.1 லட்சம் மதிப்பு உள்ள கரும்புகள் எரிந்து நாசம் ஆகியது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.