சங்கு வளையல்-பகடைக்காய் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் 2-ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்-பகடைக்காய் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-05-16 19:12 GMT

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. நேற்று பணிகள் நடந்த குழியில் இருந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயமிக்க சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது. சங்கு வளையலில் செவ்வகம், சதுர வடிவிலான அமைப்புகளும், எஸ் வடிவிலான அமைப்பும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. தமிழர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நுணுக்கமான முறையில் சங்கு வளையல் தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. 9 செ.மீ. நீளம், 1.4 செ.மீ. அகலம் கொண்ட 190 கிராம் எடையுள்ள யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காயும் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்