விலங்குகளை பராமரிக்க நிதி உதவி

விலங்குகளை பராமரிக்க நிதி உதவிபெற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ்தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-26 19:11 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நலனில் அக்கறை உள்ள அமைப்புகள், காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கும், அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்திடவும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

அதேபோன்று காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கும், வெறிநோய் தடுப்பூசி, பிராணிகளுக்கு உதவிடும் பொருட்டு உணவு வழங்குதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement /ahf TNAWB 041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரிடம் ஒப்படைக்கலாம்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்