கடையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைப்பு

மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கியதாக புகார் தொடர்பாக கடையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update: 2023-10-06 20:02 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் கீழ ரத வீதியில் தனியார் பல் ஆஸ்பத்திரி செயல்பட்டது. இங்கு பணியாற்றிய டாக்டர் மதுபோதையில் வாலிபர் ஒருவருக்கு சொத்தைப் பல்லை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், உதவி கலெக்டர் லாவண்யா தலைமையில், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா, சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கார்த்திக் அறிவுடைநம்பி, வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று அந்த தனியார் பல் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது உரிய அனுமதி பெறாமல் பல் ஆஸ்பத்திரி நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தனியார் பல் ஆஸ்பத்திரியை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். டாக்டர் மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்