JEE 2023 மற்றும் NEET 2023 நுழைவு தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை கெளரவித்த FIITJEE
தலைவர் திரு. ஜெகதீஷ் குமார் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு பதக்கங்களையும், கேடயங்களையும் வழங்கிப் பாராட்டினர்.;
JEE 2023 மற்றும் NEET 2023 நுழைவு தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை கெளரவிக்கும் FIITJEE யின் Utkarsh - 2023 நிகழ்ச்சி R S. Puram கலை அரங்கத்தில் 09.07.2023 அன்று நடைபெற்றது.
புகழ் பெற்ற DRDO விஞ்ஞானியும் பிரபல எழுத்தாளருமான டாக்டர் V. தில்லிபாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தனது அறிவியல் அனுபவங்களுடன் கூடிய சிறப்புரை நிகழ்த்தி மாணவர்களை மெய்சிலிர்க்க வைத்தார். சுகுணா குழுமங்களின் தலைவர் திரு. லட்சுமி நாராயணசாமி அவர்கள் மாணவர்களின் சிந்தைகளை தூண்டும் செய்தியால் வந்திருந்த அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
JEE Advanced - 2023 ல் தேசிய தர வரிசை பட்டியலில் முறையே 82 மற்றும் 644 இடங்களை தட்டிச் சென்ற இளம் சாதனையாளர்களான ரிஷப் நாராயணன் மற்றும் மிதுன் V ஆகிய இருவரையும் விழாவின் சிறப்பு விருந்தினர்கள், ரூ. 36 இலட்சம் மற்றும் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான FIITJEE காசோலைகளை வழங்கி கெளரவித்தனர். மேலும் NEET 2023 நுழைவுத் தேர்வில் இந்திய தர வரிசை பட்டியலில் முறையே 36 மற்றும் 91 இடங்களை தட்டிச் சென்ற ஜேக்கப் பிவின் மற்றும் சஞ்சனா N S ஆகிய இருவருக்கும் ரூ. 16 இலட்சம் மற்றும் ரூ. 10 இலட்சம் மதிப்பிலான FIITJEE காசோலைகளையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிப் பாராட்டினர்.
சாதனையாளர்களை கெளரவிக்கும் இந்நிகழ்ச்சியில் FIITJEE யின் கோவை மையத்தின் தலைவர் திரு. ஜெகதீஷ் குமார் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு பதக்கங்களையும், கேடயங்களையும் வழங்கிப் பாராட்டினர்.
மேலும் இவ்விழாவில் FTRE, NTSE மற்றும் KVPY தேர்வுகளில் தேசிய அளவில் சிறந்த இடங்களை தட்டிச் சென்ற வெற்றியாளர்களும் கெளரவிக்கப்பட்டனர். FIITJEE யில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களை தங்களது சிறப்பான கலைத்திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்வித்தனர். விழாவின் முடிவில் சாதனையாளர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் வெற்றியில் FIITJEE யின் அளப்பறிய பங்களிப்பை பாராட்டி, தங்கள் குழந்தைகளின் கனவை நனவாக்கியமைக்கு FIITJEE க்கு றன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.