மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்து திண்ணை பிரசாரம்

செம்பனார்கோவில் பகுதியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்து திண்ணை பிரசாரம் செய்யப்பட்டது.;

Update: 2022-12-31 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நாகை விற்பனைக்குழு சார்பில் செம்பனார்கோவில், பரசலூர், ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்து விளக்கும் திண்ணை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு தலைமை தாங்கினார். தலைமை அலுவலக பொறுப்பாளர் சிலம்பரசன், நாகை விற்பனை கூட மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா, விவசாயிகளிடம் மின்னணு தேசிய வேளாண் திட்டம் மர்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று நல்ல விலை பெற்றிட விற்பனைகூடம் வந்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திட்டத்தின் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் வேளாண் விற்பனை குழு அலுவலர்கள் ஆறுமுகம், சரவணன், முத்துக்குமரன், அகோரமூர்த்தி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்