காய்ச்சல் பரிசோதனை முகாம்

காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.;

Update: 2022-09-24 18:56 GMT

வேட்டமங்கலம் ஊராட்சி உன்னூத்துப்பாளையத்தில் சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் காய்ச்சல் குறித்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். பின்னர் உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அதேபோல் அதிக காய்ச்சல் உள்ளவர்களின் ரத்தத்தை எடுத்து கொரோனா பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்த அறிகுறி இருப்பின் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்