ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில்காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

Update:2023-03-11 00:30 IST

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் பென்னாகரம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரபாபு தொடங்கி வைத்தார். பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் சக்திவேல், வெற்றிவேல் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிட்லகாரம்பட்டி மற்றும் ஒன்னப்பகவுண்டன அள்ளி, முருகேசன் காலனி ஆகிய கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சல், தலைவலி, இருமல் உடல்வலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் கோபிநாத், செந்தில், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்