புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா

புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா;

Update: 2023-05-03 10:56 GMT

சேவூர்

சேவூர், முறியாண்டம்பாளையம், காமராஜ் நகரில் அறம், பொருள், இன்பமும், ஆற்றலும், ஆயுளும் ஆத்ம ஞானமும் பூத்து புகழ் சிறக்க திறம் பெற்று அன்னையாய் தேச நலம் புரிய திவ்ய வரம் அருளும் கற்பூர நாயகி கருநாக பாம்பெனவே வளர்ந்து நிற்கும் கார் கூந்தல் அள்ளி முடிந்து மங்கலமாய் திகழ்கின்ற அன்னை பராசக்தியாய் புற்றுக்கண் கொண்டு வேண்டுவதை வேண்டும் வண்ணமாய் அள்ளி, வரம் தரும் அன்னை அருள்மிகு புற்றுக்கண் மாரியம்மனுக்கு முதலாம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் திருவிழா, கடந்த 25 -ந்தேதி செவ்வாய்கிழமை கம்பம் நடுதல், காப்பு கட்டுடன் தொடங்கியது.இதையடுத்து மாரியம்மனுக்கு, காலை பூஜை, மதிய உச்சி பூஜை, மாலை சிறப்பு அலங்காரம், மகா தீபாரதனை, தினசரி காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தினசரி இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதைதொடர்ந்து நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு, அம்மன் அனிக்கூடை புறப்பாடு, நள்ளிரவு 12 மணிக்கு பூசணி வதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவிளக்கு

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு சிவன் சக்தி கரகம் அழைப்பு, சுவாமி அழைப்பு உற்சவம். காலை 6 மணிக்கு அடி அளந்து கொடுத்தல். காலை 7 மணிக்கு சேவூர் கூட்டுறவு வங்கி எதிரே அமைந்துள்ள ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். காலை 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். காலை 9 மணிக்கு திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்று, காலை 10 மணிக்கு பூவோடு எடுத்தல் கம்பம் சுற்றி ஆடுதல். இரவு 7 மணிக்கு கம்பம் களைதல். இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதை தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடல். பிரசாதம் வழங்குதல். பகல் 12 மணிக்கு மறுபூஜை நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்