கந்திகுப்பம் அருகே சாலை தடுப்பில் ஸ்கூட்டர் மோதி பெண் பலி மகன் படுகாயம்

Update: 2023-06-23 19:45 GMT

பர்கூர்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தொப்பலகுண்டாவை சேர்ந்தவர் அருணா (வயது 37). இவரது மகன் அஸ்வின்குமார் (19). அருணா நேற்று முன்தினம் காலை ஸ்கூட்டரில் தனது மகன் அஸ்வின்குமாருடன் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

செட்டிப்பள்ளி கூட்ரோடு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தாய்-மகன் 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருணா பரிதாபமாக இறந்தார். அஸ்வின்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்