ராமநாதபுரம் தங்கப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலைமேகு மகள் தாரணி (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி. இவரின் தந்தை மலைமேகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம். தந்தை மீது அதிக பாசம் வைத்திருந்த தாரணி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் நேற்று தாரணி திடீரென்று வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாரணியின் தாய் மங்களேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.