தூக்குப்போட்டு பெண் தற்கொலை

போடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-23 18:45 GMT

போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியைச் சேர்ந்தவர் குமார் பொம்மு. இவரது மனைவி காயத்ரி (வயது 38). இவர், அடிக்கடி வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்தனர். பின்னர் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரியின் தாய் புனிதா கொடுத்த புகாரின்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்