பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-21 19:08 GMT

மணிகண்டம் அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காந்திமதி (வயது 36). கலப்பு திருமணம் செய்துள்ள இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். காந்திமதி ஆஸ்துமா மற்றும் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த காந்திமதி நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்