தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேனி அருகே பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அன்னஞ்சி கிழக்கு ரத்னா நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மோனிஷா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மோனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோனிஷாவின் தந்தை குருநாதனுக்கு கணவர் பிரபு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிஷா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.