தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வஞ்சூர் கிராமத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காட்பாடி
காட்பாடியை அடுத்த வஞ்சூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுகன்யா (வயது 26) இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
8 ஆண்டுகள் ஆகியும் சுகன்யாவிற்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யாவை மின்சாரம் தாக்கியது. இதன் காரணமாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் இன்று தற்கொலை செய்து கொள்ள தூக்குப்போட்டு கொண்டார்.
இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு விருதம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.