தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நாகர்கோவிலில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை;

Update: 2022-08-25 18:20 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் வடசேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி நாகதேவி (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகதேவி 2 குழந்தைகளையும் தாய் வீட்டில் விட்டு விட்டு சென்னைக்கு படிக்க சென்றார். பின்னர் கடந்த 19-ந் தேதி வீட்டுக்கு வந்த அவர் தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாகதேவி நேற்று வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்