தூக்குப்போட்டு பெண் தற்கொலை

மதுக்கூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..;

Update: 2023-07-06 20:46 GMT

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

வாக்குவாதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நல்லிக்கோட்டை, காமராஜர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமன். இவருடைய மகள் இளவரசி (வயது.28). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பாரதிராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில்கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவுக்கும், மனைவி இளவரசிக்கும் பணம் தொடர்பாக செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மன உலைச்சலில் இருந்து வந்த இளவரசி சம்பவத்தன்று மதுக்கூர் அருகே நெம்மேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்